உலகம்

2021-இல் ஒலிம்பிக் போட்டிகள் : ஜப்பான் பிரதமர் உறுதி

DIN

கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெறுவது உறுதி என ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்துள்ளார்.

உலகம்  முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் பரவலால் நடைபெற இருந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு கோடையில் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு வருடம்  ஒத்திவைக்கப்படுவதாக  சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் சனிக்கிழமை ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை கூடியது. இதில் கலந்துகொண்டு பேசிய ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா 2021இல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் ஜப்பான் உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

"அடுத்த ஆண்டு கோடையில், டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஜப்பான் உறுதியாக உள்ளது, இது மனிதகுலம் தொற்றுநோயை தோற்கடித்தது என்பதற்கான சான்றாக அமையும்." என்று சுகா தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பிரதமரின் இந்த அறிவிப்பு ஒலிம்பிக் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT