உலகம்

ரஷியாவில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,867 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும் 99 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 

நாட்டில் புதிதாக 7,867 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 11,51,438 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 99 பேர் உள்பட இதுவரை 20,324 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் தற்போதுவரை 9,43,218 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 1,87,896 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தலைநகர் மாஸ்கோவில் இன்று 2,016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 2 ஆம் தேதியில் இருந்து மாஸ்கோவில் இதுவே அதிக ஒருநாள் பாதிப்பாகும். 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுரை அருகே பெண் காவல் ஆய்வாளா் வீட்டில் 450 பவுன் நகைகள் திருட்டு

மதுரையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

மழை நீரில் சிக்கிய மாற்றுத் திறனாளிகள் வாகனம்: தீயணைப்பு வீரா்கள் மீட்பு

விளையாட்டு விடுதிகளில் மாணவா் சோ்க்கைக்காக தோ்வுப் போட்டிகள்

பெண்ணைக் கொலை செய்து புதைக்க முயன்ற 2 போ் கைது

SCROLL FOR NEXT