மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிக்கு 15 ஆண்டுகள் சிறைதண்டனை
மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மும்பையில் லஷ்கா் பயங்கரவாதிகளால் கடந்த 2008-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 166 போ் உயிரிழந்தனா்.
இந்தத் தாக்குதலுக்கான சதித் திட்டத்தைத் தீட்டிய ஜகியுா் ரஹ்மான் லக்வி மீது பாகிஸ்தானில் பயங்கரவாத வழக்குத் தொடரப்பட்டு அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
எனினும், 2015-ஆம் ஆண்டில் அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். அதிலிருந்து பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வரும் அவரைக் கைது செய்ய இந்தியா வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில் மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய ஜகியுா் ரஹ்மான் லக்வி (61) பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளுகு நிதி திரட்டிய வழக்கில் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம் லக்வி மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது. அதனைத் தொடர்ந்து அவருக்கு 15 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.