உணவகங்கள், திரையரங்குகள் மூடியேயிருக்கும்; பிரான்ஸில் தீவிரமெடுக்கும் கரோனா பாதிப்பு
பிரான்ஸில் கரோனா பாதிப்பு தீவிரமெடுக்கும் நிலையில், பிரிட்டன் மற்றும் தென்னாப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனா பாதிப்பும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பாரீஸ்: பிரான்ஸில் கரோனா பாதிப்பு தீவிரமெடுக்கும் நிலையில், பிரிட்டன் மற்றும் தென்னாப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனா பாதிப்பும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதனால், ஜனவரி மாதம் வரை உணவகங்கள், மதுபானக் கூடங்கள், திரையரங்குகள் எதுவும் திறக்கப்பட மாட்டாது என்று பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார்.
தற்போது பிரான்ஸில் நிலைமை மோசமடைந்துள்ளது. இயல்பு நிலைக்குத் திரும்பும் சூழ்நிலை வெகுதொலைவில் உள்ளது. தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்தே வருகிறது, டிசம்பர் மாத மத்தியில் இருந்து தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 10 ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது அதுவே 15 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டிலுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகளில் பாதிக்கம் மேல் கரோனா நோயாளிகளால் நிரப்பப்பட்டுள்ளது.
தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட அதிதீவிர கரோனா பாதித்தோர் எண்ணிக்கை தற்போது மூன்றாக அதிகரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.