முகப்பு
உலகம்

ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 14 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் 5 தலிபான்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

Updated On : 12 ஜனவரி 2021, 4:54 pm IST
ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 14 பயங்கரவாதிகள் பலி
பகிர்:

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் 5 தலிபான்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு ராணுவம் அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டது. தலிபான்கள் பதுங்கியிருந்த இடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டத் தாக்குதலில் 14 பேர் பலியாகினர்.

விசாரணையில் அவர்களில் 9 பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் எனத் தெரிய வந்தது. அதேபோல் செவ்வாய்க்கிழமை பாக்லான் மாகாணத்தின் ஜமன்கைல் மற்றும் சாஷ்மாய் ஷேர் பகுதிகளில் நடத்தப்பட்டத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments