தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்த பிரிட்டன் பிரதமர்
பொங்கல் பண்டிகையையொட்டி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமிழர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமிழர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தை திங்கள் முதல் நாளான இன்று அதிகாலை முதலே விவசாய பெருமக்கள் வீடுகளில் வண்ணத் தோரணங்களைக் கட்டி புதுப் பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை வணங்கினர்.
பொங்கல் தினத்தையொட்டி உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமிழர்களுக்கு தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
தனது சுட்டுரைப் பதிவில், “பிரிட்டன் மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சியான தாய் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.