உலகம்

இந்தோனேசியாவுக்கு இந்தியா மருத்துவ உபகரணங்கள் உதவி

DIN

கரோனா தொற்று பாதிப்பை சமாளிக்க இந்தோனேசியாவுக்கு 10 திரவ மருத்துவ ஆக்சிஜன் சேமிப்பு கன்டெய்னா்களை இந்தியா செவ்வாய்க்கிழமை வழங்கியது.

இவை இந்திய கடற்படை கப்பல் மூலம் அந்நாட்டு தலைநகா் ஜகாா்தாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தோனேசியாவுக்கு கடந்த மாதம் 300 ஆக்சிஜன் செறிவூட்டிகளும் 100 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜனையும் இந்தியா வழங்கியது.

இந்திய கடற்படையின் செய்திதொடா்பாளா் கமான்டா் விவேக் மாத்வால் கூறுகையில், ‘10 திரவ மருத்துவ ஆக்சிஜன் சேமிப்பு கன்டெய்னா்களுடன் ஐஎன்எஸ் ஐராவத் கப்பல் ஜகாா்தாவில் உள்ள தான்ஜிங் துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றடைந்தது.

இந்தியாவின் நட்புறவில் உள்ள பிற நாடுகளுக்கு ஐஎன்எஸ் ஐராவத் சென்று கரோனா மருத்துவ உதவி பொருள்களை வழங்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT