கோப்புப்படம் 
உலகம்

காபூல் விமான நிலையத்தில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் மற்றொரு தாக்குதல்: ஜோ பைடன் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் மீட்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தில் அடுத்த 24 - 36 மணி நேரத்திற்குள் மற்றொரு தாக்குதல் நிகழலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

DIN

ஆப்கானிஸ்தானில் மீட்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தில் அடுத்த 24 - 36 மணி நேரத்திற்குள் மற்றொரு தாக்குதல் நிகழலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் காபூலில் விமான மூலம் மக்களை மீட்கும் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், மீட்பு பணிகள் முடிவதற்குள் மற்றொரு தாக்குதல் நிகழலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அமெரிக்கா தலைமையில் நடைபெற்ற மீட்பு பணிகளால் இதுவரை 112,000 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்னும், ஆயிரக்கணக்கான மக்கள் காபூலில் மீட்கப்படாமல் உள்ளனர் என மேற்கத்திய நாடுகள் தெரிவித்தபோதிலும், மீட்பு பணிகள் முடிவுக்கு வரவுள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத குழுவால் அமெரிக்க படையினரை குறிவைத்து வியாழக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைபடை வெடிகுண்டு சம்பவம் மீட்பு பணிகளை மேலும் கடினமாக்கியது. 

இச்சம்பவத்தில், அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 13 பேர் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதக் குழுவை குறிவைத்து அமெரிக்கா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில், இரண்டு முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்கஎங்கே தலிபான் தலைவா்?

இதுகுறித்து பைடன் மேலும் கூறுகையில், "ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் மிகவும் ஆபத்தாக உள்ளது. விமான நிலையத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமாகவே உள்ளது. அடுத்த  24 - 36 மணி நேரத்திற்குள் மற்றொரு தாக்குதல் நிகழலாம் என கமாண்டர்கள் தெரிவித்துள்ளனர்" என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தான்குளம் பள்ளியில் மனநல திட்ட பயிற்சி முகாம்

பெரியதாழையில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

சாத்தான்குளத்தில் டிச. 4, 5இல் படி தராசுகளுககு முத்திரையிடும் முகாம்

தட்டாா்மடத்தில் பூட்டி கிடக்கும் பொது கழிப்பறை: நாம் தமிழா் கட்சியினா் புகாா்

பரமன்குறிச்சியில் திமுக நல உதவிகள் வழங்கல்

SCROLL FOR NEXT