மலேசிய நெடுஞ்சாலை விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி 
உலகம்

மலேசிய நெடுஞ்சாலை விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி

மலேசியாவில், செலாங்கோர் மாகாணத்தின் நெடுஞ்சாலையில், வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில், 8 குழந்தைகள் உள்பட 10 பேலியாகினர்.

ANI


மலேசியாவில், செலாங்கோர் மாகாணத்தின் நெடுஞ்சாலையில், வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில், 8 குழந்தைகள் உள்பட 10 பேலியாகினர்.

வெள்ளிக்கிழமை இரவு 11.40 மணிக்கு நேரிட்ட இந்த விபத்தில், மூன்று கார்கள், ஒரு லாரி ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 17 பேர் சிக்கியிருந்தனர். அவர்களில் 10 பேர் பலியாகிவிட்டனர். அவர்களில் ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் 8 குழந்தைகள் அடங்குவர். அவர்களில் 5 சிறுவர்கள், 3 பேர் சிறுமிகள் ஆவர்.

லாரியின் கீழ் சிக்கியிருந்த கார்களை அகற்றவும், வாகனங்களுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கவும், கிரேன் உதவியோடு, மீட்புப் படையினர் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

SCROLL FOR NEXT