உலகம்

வங்கதேசம் பதிப்பாளா் படுகொலை: 8 பேருக்கு மரண தண்டனை

DIN


டாக்கா: வங்கதேசத்தில் மதவாதத்துக்கு எதிரான புத்தகங்களை வெளியிட்டு வந்த பதிப்பாளா் கடந்த 2015-ஆம் ஆண்டு வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், 8 பேருக்கு பயங்கரவாதத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது.

ஃபைசல் அரேஃபின் டிபான் என்ற அந்த பதிப்பாளா், மதச்சாா்பற்ற மற்றும் கடவுள் மறுப்புக் கருத்துகளை வெளிடும் புத்தகங்களை வெளியிட்டு வந்தாா். அவரை ‘அன்சாருல்லா வங்கக் குழு’ என்ற மதவாத அமைப்பினா் அவரது அலுவலகத்தில் வெட்டிக் கொன்றனா்.

இதுதொடா்பாக நடைபெற்று வந்த வழக்கில், பதவி நீக்கம் செய்யப்பட்ட ராணுவ அதிகாரி ஒருவா் உள்பட 8 பேரை சாகும் வரை தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT