உலகம்

நார்வே நிலச்சரிவு: காணாமல் போனவர்களை மீட்க முடியாமல் அதிகாரிகள் தவிப்பு

DIN

நார்வே நாட்டின் ஜெஜெர்ட்ரம் நகரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

தெற்கு நார்வேயின் ஜெஜெர்ட்ரம் நகரத்தில் கடந்த புதன்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள 12க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தன. மேலும் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் வரை பலியாகியும், 10 பேர் காயமடைந்தும் உள்ளனர். இதுவரை 11 பேர் வரை நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிலச்சரிவு காரணமாக அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.  ஒரு வாரத்தைக் கடந்து நடந்து வரும் மீட்புப் பணிகளின் மத்தியில் “நிலச்சரிவில் சிக்கிய மக்களை உயிருடன் மீட்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. இதனால் எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது” என்று மாகாண காவல்துறைத் தலைவர் ஐடா மெல்போ ஓயஸ்டீஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான அடுத்த கட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT