உலகம்

பிரேசிலில் அதிகரிக்கும் கரோனா பலி: ஒரேநாளில் 1,318 பேர் பலி

DIN

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 1,318 பேர் பலியாகினர்.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் மேலும் கூறியிருப்பதாவது: 

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கையில் 2 ஆவது இடத்திலும் கரோனா பாதிப்பில் 3 ஆவது இடத்திலும் உள்ளது பிரேசில். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கரோனா பலி எண்ணிக்கை இங்கு அதிகரித்து வருகிறது.  

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 1,318 பேர் பலியாகினர். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 5,54,497 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 42,283 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,98,39,369 ஆக அதிகரித்துள்ளது. 1,85,69,991 பேர் கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

பிரேசிலில் 13.76 கோடி முறை ஒரு தவணை தடுப்பூசியையும், 3.94 கோடி பேர் முழுமையாகவும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கடந்த சில தினங்களாக பிரேசிலில் கரோனா பலி 1,300க்கும் அதிகமாக பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT