முகப்பு
உலகம்

நைஜீரியாவில் இரண்டு பேருந்துகள் மோதல்: 18 பேர் பலி

நைஜீரியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டத்தில் 18 பேர் பலியானார்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

நைஜீரியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டத்தில் 18 பேர் பலியானார்கள்.
நைஜீரியாவின் பிர்னிங்குடு பகுதியில் நேற்று இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் பேருந்துகளில் தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் 18 பேர் பலியானார்கள். தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டன. விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நைஜீரியாவில் மோசமான சாலை உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி சாலை விபத்துகள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.