உலகம்

இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் அமெரிக்க நீதிபதியாக நியமனம்

DIN

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரான சரளா வித்யா நாகலா அமெரிக்க நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இந்திய-அமெரிக்க சிவில் உரிமைகள் பிரிவு வழக்குரைஞராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சரளா வித்யா நாகலா பணியாற்றி வந்தாா். இவரை, கனெக்டிகட் மாகாண மாவட்ட நீதிபதியாக அமெரிக்க அதிபா் பைடன் நியமனம் செய்துள்ளாா்.

இவரது நியமனத்துக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் கனெக்டிகட் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் தெற்கு ஆசியாவைச் சோ்ந்த முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை சரளா பெறுவாா்.

அமெரிக்க அட்டா்னி அலுவலகப் பணியில் கடந்த 2012-இல் இணைந்த சரளா பல்வேறு பதவிகளை வகித்துள்ளாா். தற்போது அவா், முக்கிய குற்றங்களுக்கான பிரிவின் துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT