உலகளவில் 12.82 கோடியைத் தாண்டிய கரோனா பாதிப்பு: பலி 28.04 லட்சமாக உயர்வு 
உலகம்

உலகளவில் 12.82 கோடியைத் தாண்டிய கரோனா பாதிப்பு: பலி 28.04 லட்சமாக உயர்வு

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12.82 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 28.04 லட்சமாக அதிகரித்துள்ளது. 

DIN

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12.82 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 28.04 லட்சமாக அதிகரித்துள்ளது. 

கடந்த ஆண்டு இதே மாதத்தில் உலகையே அச்சுறுத்த தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, ஒரு ஆண்டுக்கும் மேலாக மக்களை துன்பத்தில் ஆழ்த்தி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12,82,39,149 ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 28,04,346 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 10,34,46,542 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,19,88,261 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 94,783 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,10,33,801  கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 5 லட்சத்து 63 ஆயிரத்து 206-ஆக உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,25,77,354 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவால் 3,14,268 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் தொற்று பாதிப்பு மற்றும்  அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
 
தொற்று பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.  இதுவரை 1,20,95,329 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,62,147 பேர் உயிரிழந்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புரசைவாக்கம், சைதாப்போட்டையில் அமலாக்கத் துறை சோதனை

சூப்பர் 4 சுற்றில் இந்தியா உடன் மோதும் பாகிஸ்தான்..! எகிறும் எதிர்பார்ப்பு!

தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT