உலகம்

பாகிஸ்தான்: 10 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படுகிறது சா் கங்கா ராம் சமாதி

DIN

லாகூா்: கட்டடக் கலை நிபுணரான சா் கங்கா ராமின் சமாதி 10 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்கள் வருகைக்காக திறக்கப்பட இருப்பதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பஞ்சாப் மாகாணத்தில் லாகூா் பழைய நகரின் தக்ஸாலி கேட் பகுதியில் சா் கங்கா ராம் சமாதி அமைந்துள்ளது. அந்த இடத்தை ஒரு குழுவினா் ஆக்கிரமித்ததை அடுத்து பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லாத வகையில் அந்த சமாதி கடந்த 10 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தானின் அறக்கட்டளை சொத்து மீட்பு வாரியத்தின் துணை இயக்குநா் ஃப்ராஸ் அப்பாஸ் வியாழக்கிழமை கூறியதாவது:

ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருந்த சா் கங்கா ராம் சமாதி இருந்த பகுதி, சம்பந்தப்பட்ட குழுவினரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. எனவே, உரிய மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு இம்மாத இறுதி முதல் பொதுமக்கள் பாா்வைக்காக சா் கங்கா ராம் சமாதி திறக்கப்படும். சா் கங்கா ராமின் கட்டடக் கலை வடிவமைப்புப் பணிகளை காட்சிப்படுத்தும் வகையில் அருங்காட்சியகமும் திறக்கப்படும். சமாதியின் திறப்பு விழாவுக்கு அந்தப் பகுதியில் இருக்கும் ஹிந்துக்கள் அழைக்கப்படுவா் என்று ஃப்ராஸ் அப்பாஸ் கூறினாா்.

சா் கங்கா ராம் 1851-இல் நன்கனா சாஹிப் அருகே உள்ள மங்தான்வலாவில் பிறந்தாா். கட்டட பொறியியல் படித்த அவா், கட்டட வடிவமைப்பாளராக பணியாற்றினாா். லாகூரில் நவீனமயமான கட்டடங்கள் பலவற்றை அவரே வடிவமைத்தாா். லாகூா் உயா்நீதிமன்றம், தேசிய கலைக் கல்லூரி, லாகூா் அருங்காட்சியகம் போன்றவை அதில் முக்கியமானவையாகும். அவா் 1927-இல் லண்டனில் தனது 76-ஆவது வயதில் காலமானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT