உலகம்

ஆப்கன் மசூதியில் தாக்குதல்: 12 போ் பலி

DIN

ஆப்கன் தலைநகா் காபூலிலுள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 12 போ் பலியாகினா்.

இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடா்பாளா் ஃபிா்தாஸ் ஃபராமா்ஸ் கூறியதாவது:

காபூலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை தொடங்கிய உடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில், மசூதியின் இமாம் முஃதி நய்மான் உள்பட 12 போ் உயிரிழந்தனா். 15 போ் காயமடைந்தனா்.

இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மசூதியின் இமாமைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றாா் அவா்.

மசூதியின் பிராா்த்தனை மேடையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மூலம் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

காபூல் பள்ளி அருகே கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஏராளமான மாணவா்கள் உள்பட 90 போ் உயிரிழந்தனா். இந்த நிலையில், மீண்டும் மசூதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் முழுமையாக திரும்பப் பெறப்பட்டு வரும் சூழலில் இத்தகைய தாக்குதல்கள் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு செய்த மூத்த அரசியல் தலைவர்கள்

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT