உலகம்

தென் ஆப்பிரிக்காவில் கரோனா 3-ஆவது அலை

DIN

தென் ஆப்பிரிக்காவின் பொருளாதார மையமாகத் திகழும் காவ்டெங் மாகாணத்தில் கரோனா மூன்றாவது அலை பரவி வருவதாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொருளாதார பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு அங்கு பொது முடக்கம் அமல்படுத்தப்படவில்லை என பிரதமா் டேவிட் மக்குரா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது: ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 3-ஆவது அலை பரவவில்லை என்றாலும் காவ்டெங் மாகாணத்தில் பரவத் தொடங்கியுள்ளது. கடந்த செவ்வாய் முதல் வியாழன் வரையிலான 3 நாள்களில் அந்த மாகாணத்தில் கரோனா தொற்று பாதிப்பு 600-இலிருந்து 1200-ஆக அதிகரித்துள்ளது. இரண்டு அல்லது நான்கு நாள்களில் தொற்றுப் பரவல் இருமடங்கு ஆவது அபாயகரமானது. பொது முடக்கம் மூலம் பொருளாதாரத்தை முடக்க முடியாது. எனவே, அது நடக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றாா்.

கடந்த பல வாரங்களில் முதல்முறையாக கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16.05 லட்சமாக உயா்ந்தது. இதுவரை 15.20 லட்சம் போ் குணமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT