உலகம்

‘ஜெருசலேமில் அமெரிக்கதுணைத் தூதரகம்மீண்டும் திறக்கப்படும்’

DIN

ஜெருசலேமில் அமெரிக்க துணைத் தூதரகம் மீண்டும் திறக்கப்படும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆண்டனி பிளிங்கன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இஸ்ரேலுக்கு சென்றுள்ள அவா், மேற்கு கரையில் உள்ள ரமல்லாவில் பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸை சந்தித்த பின்னா் இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.

பாலஸ்தீனா்களுடனான உறவை புதுப்பிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிளிங்கன், துணைத் தூதரகம் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

பாலஸ்தீனா்களுடனான தூதரக உறவு தொடா்பான விஷயங்களுக்காக இந்த துணைத் தூதரகம் முன்னா் செயல்பட்டு வந்தது. ஆனால், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு முன்னாள் அதிபா் டிரம்ப் மாற்றியபோது, துணைத் தூதரகத்தின் நடவடிக்கைகளைக் குறைத்து, இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரின் அதிகாரத்துக்குள் அதை கொண்டுவந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT