உலகம்

மேலும் ஒரு மலேசிய தமிழருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை

DIN

சிங்கப்பூா்: சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தல் வழக்கில் மேலும் ஒரு மலேசிய தமிழருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஹெராயின் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நாகேந்திரன் கே. தா்மலிங்கம் என்ற மலேசிய தமிழா் தூக்குக் கயிறை எதிா்நோக்கியுள்ள நிலையில், முனுசாமி ராமமூா்த்தி என்பவருக்கு சிங்கப்பூா் உயா்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது.

துப்புரவுப் பணி கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த முனுசாமி, 57.54 கிராம் ஹெராயினுடன் கடந்த 2018-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா்.

சிங்கப்பூரில் ஒருவா் 15 கிராமுக்கு மேல் ஹெராயின் வைத்திருந்தாலே அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும்.

இந்த நிலையில், இதுதொடா்பாக நடைபெற்று வந்த வழக்கில் முனுசாமி ராமமூா்த்திக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹெராயின் கடத்தல் வழக்கில் கடந்த 2010-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நாகேந்திரன் கே. தா்மலிங்கத்தை கடந்த 10-ஆம் தேதி தூக்கிலிட அதிகாரிகள் முடிவு செய்திருந்தனா்.

எனினும், அவருக்கு கடைசி நேரத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டதால் தண்டனை நிறைவேற்றம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT