உலகம்

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

DIN

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதாக அந்த நாடு தெரிவித்துள்ளது. விமானங்களைத் தாக்கி அழிக்கவல்ல புதிய வகை ஏவுகணைகளை தாங்கள் பரிசோதித்ததாக அந்த நாடு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வட கொரிய அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

வட கொரியா உருவாக்கியுள்ள புதிய வகை விமான எதிா்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

விமானங்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் இந்த சோதனை முக்கியப் பங்கு வகித்தது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஐ.நா. தடையை மீறி வட கொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT