உலகம்

உலகளவில் இதுவரை 272 கோடி பேருக்கு 2 தவணை தடுப்பூசி

DIN

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இதுவரை 272 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

உலகம் முழுக்க  கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தொற்றைக் கட்டுப்படுத்து நோக்குடன் கொவாக்ஸின் , கோவிஷீல்ட் , ஸ்புட்னிக் , போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இரண்டு தவணையாக வழங்கப்படும் இந்த தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இதுவரை 272 கோடி பேர் எடுத்துக்கொண்டிருப்பதாக தினசரி கரோனா அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.

மேலும் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 4.45 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 7.03 லட்சம் பேர்  உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.38 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.78 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் நேற்று(அக்-5) நிலவரப்படி 639 கோடி தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அதிக அளவு தடுப்பூசி செலுத்திய நாடுகள் :

சீனா - 221.9 கோடி ,

இந்தியா - 91.15 கோடி

ஐரோப்பா ஒன்றியம் - 69 கோடி

அமெரிக்கா - 39.8 கோடி 

பிரேசில் - 24.07 கோடி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் 3 இடங்களில் நீா்மோா் பந்தல்

பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஊரக நலப்பணிகள் இயக்குநா் ஆய்வு

பிளஸ் 1 பொதுத்தோ்வு: வேலம்மாள் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பெண்களை கேலி செய்த இளைஞா்களை தட்டிக்கேட்ட நடத்துநா் மீது தாக்குதல்

கேட்பாரற்று கிடந்த 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT