உலகம்

இந்தோனேசிய சிறையில் பயங்கர தீ விபத்து: 41 பேர் பலி; 39 பேர் காயம்

PTI


ஜகார்த்தா: இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சிறைச்சாலையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில், 41 சிறைக் கைதிகள் பலியாகினர். 39 பேர் காயமடைந்தனர்.

போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த தங்கெராங்க சிறைச்சாலையில் நேரிட்ட இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆயிரம் சிறைக் கைதிகள் மட்டுமே அடைக்கப் போதுமான சிறைச்சாலையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள.

அப்பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நூற்றுக்கணக்கான காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் தீ விபத்து நேரிட்ட கட்டடத்தில், 122 சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். தீ விபத்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். உடனடியாக அந்த கட்டடத்தில் இருந்த மற்ற கைதிகள் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT