சீனா: மேலும் ஒரு நகரில் டெல்டா கரோனா அலை
சீனாவில் மேலும் ஒரு நகரில் டெல்டா வகை கரோனா அலை எழுந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பெய்ஜிங்: சீனாவில் மேலும் ஒரு நகரில் டெல்டா வகை கரோனா அலை எழுந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 59 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 59 பேரும், கிழக்குக் கடலோர நகரமான ஃபுஜியானைச் சோ்ந்தவா்கள்.
ஏற்கெனவே, துறைமுக நகரான ஜியாமெனில் கடந்த 2 நாள்களில் மட்டும் 33 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. புடியான் நகரில் மேலும் 59 பேரிடம் அந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
சீனாவில் கரோனா பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், இந்தியாவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகை கரோனாவால் அங்கு தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.