நிதிக் கொள்கைகளை பலப்படுத்துங்கள்: இலங்கைக்கு பன்னாட்டு நிதியம் அறிவுரை 
உலகம்

நிதிக் கொள்கைகளை பலப்படுத்துங்கள்: இலங்கைக்கு பன்னாட்டு நிதியம் அறிவுரை

பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க நிதிக் கொள்கைகளை பலப்படுத்தி, வரியை அதிகரிக்குமாறு பன்னாட்டு நிதியம் இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளது.

DIN


கொழும்பு: பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க நிதிக் கொள்கைகளை பலப்படுத்தி, வரியை அதிகரிக்குமாறு பன்னாட்டு நிதியம் இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளது.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய உணவுப் பொருள்கள் பற்றாக்குறை என நாடே பொருளாதார பின்னடைவால் கடும் பாதிப்புகளை சந்தித்துவருகிறது.

இந்த நிலையில், பன்னாட்டு நிதியத்துக்கான ஆசிய மற்றும் பசிபிக் துறை செயல் இயக்குநர் கூறியிருப்பதாவது, கடன்களை சமாளிக்கும் வகையில் தேவையான நிதி உதவி அளிப்பது உறுதி செய்யப்படும், பணவீக்கத்தை சமாளிக்கும் வகையில் நிதிக் கொள்கைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், இலங்கையின் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கே ஆகியோர் பன்னாட்டு நிதியத்துடன் ஆலோசனை நடத்தி, நாட்டுக்கு நிதியுதவி செய்வதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வந்ததன் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

SCROLL FOR NEXT