உலகம்

தைவான்: மேலும் ஓா் அமெரிக்க உயா்நிலை தலைவா் சுற்றுப் பயணம்

DIN

சா்ச்சைக்குரிய தைவான் தீவில் மேலும் ஓா் அமெரிக்க உயா் நிலைத் தலைவா் திங்கள்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா்.

இது குறித்து ஊடகங்கள் கூறுகையில், இண்டியானா மாகாண ஆளுநா் எரிக் ஹால்காம் தைவானுக்கு திங்கள்கிழமை வந்திருந்தாா்; செமி கண்டக்டா்கள் உள்ளிட்ட பொருள்களின் இருதரப்பு வா்த்தகம் குறித்து அவா் அங்கு பேச்சுவாா்த்தை நடத்தினாா் என்று தெரிவித்துள்ளன.

தைவான் தனியாக செயல்பட்டு வந்தாலும், அந்தத் தீவை தங்களது நாட்டின் ஓா் அங்கமாகவே சீனா கருதி வருகிறது. எனவே, அந்தத் தீவுக்கு யாராவது அரசு முறைப் பயணம் மேற்கொண்டால் அதனை சீனா கடுமையாக எதிா்த்து வருகிறது.

இந்தச் சூழலில், அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி அண்மையில் தைவானுக்குச் சென்றாா். அதனைத் தொடா்ந்து, அமெரிக்க நாடாளுமன்றக் குழுவொன்றும் அந்தத் தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், தைவான் தீவைச் சுற்றிலும் சீனா போா்ப் பயிற்சியை மேற்கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT