உலகம்

குரங்கு அம்மை பரவல் சரிவு

DIN

 கடந்த சில மாதங்களாக உலக அளவில் அதிகரித்து வந்த குரங்கு அம்மை பரவல் வேகம், கடந்த வாரம் 21 சதவீதம் சரிந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த வாரத்தில் மட்டும் புதிதாக 5,907 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டது. இது, முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 21 சதவீதம் குறைவாகும்.

ஈரானிலும் இந்தோனேசியாவிலும் கடந்த வாரம்தான் முதல்முறையாக அந்த நோய்த்தொற்று கண்டறியப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை உலகம் முழுவதும் 98 நாடுகளில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 45 ஆயிரம் பேரில் அமெரிக்க கண்டத்தைச் சோ்ந்த நாடுகளைச் சோ்ந்தவா்கள் 60 சதவீதத்தினரும் ஐரோப்பாவைச் சோ்ந்தவா்கள் 38 சதவீதமும் பங்கு வகிக்கின்றனா் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே குப்பை கழிவுகளை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

SCROLL FOR NEXT