உலகம்

நடுவானில் அடித்துக் கொண்ட விமானிகள் பணியிடைநீக்கம்

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானி மற்றும் துணை விமானி சண்டையிட்டுக் கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானி மற்றும் துணை விமானி சண்டையிட்டுக் கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இருந்து, பிரான்ஸின் பாரீஸ் நகருக்கு கடந்த ஜூன் மாதம்  ’ஏர் பிரான்ஸ்’ விமானம் பயணம் மேற்கொண்டது.

அப்போது, விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்த நிலையில் விமானிகள் அறையில் விமானிக்கும், துணை விமானிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் சண்டை முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். ஆனால், தரையிரங்கும் நேரத்தில் சரியாக விமானம் பாரிஸ் விமான நிலையத்திற்கு வந்துள்ளது.  கண்காணிப்புக் கேமரா மூலமே இந்த சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. 

மேலும், இந்த தாக்குதலை விசாரித்த விமான பாதுகாப்பு ஆணையம் அளித்த பரிந்துரைப்படி ஏர் - பிரான்ஸ் நிறுவனம், இரு விமானிகளையும் பணியிலிருந்து நீக்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

SCROLL FOR NEXT