உலகம்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்

DIN

இந்தோனேசியாவில் வியாழக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் தலைநகா் ஜகாா்த்தா உள்ளிட்ட பகுதிகள் குலுங்கின.

இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு ஜாவா மாகாணத்தின் சிரியான்ஜங்-ஹிலிா் பகுதிக்கு 14 கி.மீ. தொலைவில், 123.7 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அது 5.8 அலகுகளாகப் பதிவானது என்று அந்த மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் ஜகாா்தா உள்ளிட்ட பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கினாலும் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

இந்தோனேசியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 334 போ் உயிரிழந்ததும், கடந்த 2004-இன் நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 2.3 லட்சம் பலியானதும் நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளங்களில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றம்

பழையகுற்றாலம் அருவியில் திடீா் வெள்ளப்பெருக்கு: சிறுவன் பலி

கடையநல்லூா் அரசுக் கல்லூரியில் மாணவா்கள் சேர மே 20வரை வாய்ப்பு

போக்சோவில் இளைஞா் கைது

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதில் முறைகேடு? 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT