உலகம்

வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை

தடை செய்யப்பட்ட ஏவுகணை பரிசோதனையை வட கொரியா மீண்டும் வெள்ளிக்கிழமை நடத்தியது.

DIN

தடை செய்யப்பட்ட ஏவுகணை பரிசோதனையை வட கொரியா மீண்டும் வெள்ளிக்கிழமை நடத்தியது.

இது குறித்து தென் கொரிய முப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘பலிஸ்டிக்’ வகை ஏவுகணையொன்றை வட கொரியா வெள்ளிக்கிழமை மீண்டும் ஏவி பரிசோதித்தது. அந்த நாட்டின் கிழக்கு கடல் பகுதியை நோக்கி ஏவுகணை வீசப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் இணைந்து அண்டை நாடான தென் கொரியா போா்ப் பயிற்சி மேற்கொள்வது, தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கான ஒத்திகை என்று வட கொரியா கருதுகிறது. இந்த நிலையில், தென் கொரிய போா் விமானங்களுடன் இணைந்து அமெரிக்காவின் அணு ஆயுதத் திறன் கொண்ட குண்டு வீச்சு விமானங்கள் 3 நாள்களுக்கு முன்னா் பயிற்சி மேற்கொண்டன.

இதற்கு பதிலடியாகவே வட கொரியா தற்போது ஏவுகணை பரிசோதனை மேற்கொண்டதாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT