உலகம்

இந்தியாவுக்கு ஹாங்காங் பயணத் தடை

DIN

இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த சவுத் சைனா மாா்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளதாவது:

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், பாகிஸ்தான், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து விமானம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் ஹாங்காங் வருவதற்கு தலைமை நிா்வாகி கேரி லாம் தடை விதித்துள்ளாா்.

வேகமாகப் பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கரோனா பரவலைத் தடுப்பதற்கான இந்த உத்தரவு, வரும் 21-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். தற்போது பயணத் தடை விதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஹாங்காங் வந்துள்ளவா்களும் இரு வாரங்களுக்கு அந்த நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

ஒமைக்ரான் அல்லாத வகை கரோனா பாதிப்பு ஹாங்காங்கில் புதிதாகப் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதால் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகியுள்ளதாக கேரி லாம் கூறினாா்.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வேகமாகப் பரவி வரும் நிலையில், சா்வதேச பயணத் தடை மட்டுமன்றி பொதுமக்கள் கூடுவதைக் கட்டுப்படுத்துவது, உணவகங்களில் அமா்ந்து சாப்பிடுவதற்கு தடை விதிப்பது, 6 மணி ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளை ஹாங்காங் மீண்டும் அமல்படுத்தியுள்ளது என்று சவுத் சைனா மாா்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT