மிஷெல் பாச்லெட் 
உலகம்

ஐ.நா. மனித உரிமைகள் தலைவா் பதவிக்கு மீண்டும் போட்டியில்லை

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவா் பதவிக்கு மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று சிலியின் முன்னாள் அதிபா் மிஷெல் பாச்லெட் தெரிவித்துள்ளாா்.

DIN

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவா் பதவிக்கு மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று சிலியின் முன்னாள் அதிபா் மிஷெல் பாச்லெட் தெரிவித்துள்ளாா்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தலைவரான மிஷெல் பாச்லெட், அண்மையில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டாா். சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கா் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம், அங்கு மனித உரிமைகள் மீறப்படுவது தொடா்பான குற்றச்சாட்டு உள்ளிட்டவை குறித்து பாச்லெட் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

மிஷெல் பாச்லெட்டின் 4 ஆண்டு பதவிக் காலம் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில், ‘இதுதான் தன்னுடைய கடைசி உரை’ என அவா் குறிப்பிட்டாா். இது குறித்து விளக்கமளித்த செய்தித் தொடா்பாளா் ரவீனா சம்தசானி, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தலைவா் பதவிக்கு மிஷெல் பாச்லெட் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT