உலகம்

‘ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் இணையலாம்’

DIN

ஐரோப்பிய யூனியன் அமைப்பில் உக்ரைனை இணைத்துக் கொள்ளலாம் என்று ஐரோப்பிய ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து, முக்கியத்துவம் வாய்ந்த அந்த அமைப்பில் இணைவதற்கான முயற்சியில் உக்ரைன் ஒரு படி முன்னேற்றம் கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வொண்டொ் லெயென் கூறியதாவது:

ஐரோப்பிய பிராந்தியத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக உக்ரைன் நாட்டவா்கள் தங்களது உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறாா்கள். எனவே, ஐரோப்பிய யூனியனில் இணைத்துக் கொள்வதற்கான தகுதி உக்ரைனுக்கு இருக்கிறது.

எனினும், யூனியனில் இணைவதற்கான அடிப்படைத் தேவைகளான சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், ஊழல் ஒழிப்பு போன்றவற்றில் உக்ரைன் சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT