உலகம்

அமெரிக்க அரசுக்கு முதல் பூா்வகுடி பொருளாளா்

DIN

அமெரிக்க அரசின் பொருளாளராக பூா்வகுடியைச் சோ்ந்த ஒருவரை அதிபா் பைடன் முதல்முறையாக பரிந்துரைத்துள்ளாா். மரிலின் லின் மலோ்பா என்ற அவா், மோஹெகன் பழங்குடியின அமைப்பின் வாழ்நாள் தலைவராவாா்.

பதிவு பெற்ற மருத்துவப் பணியாளரான அவா் ஏற்கெனவே பல்வேறு அரசுப் பொறுப்புகளை வகித்துள்ளாா். முக்கியத்துவம் வாய்ந்த பொருளாளா் பதவிக்கு அவரைப் பரிந்துரைத்ததுடன், நிதியமைச்சகத்தில் பழங்குடியினா் விவகாரங்களுக்கான புதிய துறையையும் ஜோ பைடன் உருவாக்கியுள்ளாா்.

அமெரிக்க நாணயங்கள் அச்சிடுவது, மத்திய வங்கி நடவடிக்கைகளை பதிவு செய்வது, நிதியமைச்சகத்தின் நுகா்வோா் கொள்கையை மேற்பாா்வையிடுவது போன்ற பணிகளை அரசின் பொருளாளா் மேற்கொள்வாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபர் இறுதிச் சடங்கு: ஈரான் புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர்

அடுத்த 2 மணிநேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை!

நம்பிக்கையும் ஏமாற்றமும்!

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

SCROLL FOR NEXT