கேரளத்தைச் சேர்ந்த 36 மாணவர்கள் திங்கள்கிழமை மாலை உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரள அரசு செவ்வாயன்று வெளியிட்ட சுட்டுரை பதிவில்,
நேற்று மாலை உக்ரைனிலிருந்து தில்லிக்கு வந்த 36 மாணவர்களில் 25 பேர் கொச்சிக்கும், 11 பேர் திருவனந்தபுரத்திற்குப் புறப்பட்டனர்.
ரஷிய உக்ரைன் மோதலால் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமைக்கு மத்தியில், உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் தலைநகர் கிவ்வை விட்டு உடனே வெளியேறுமாறு செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
அதோடு, மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் இன்று அவசரமாக கிவ்வை விட்டு வெளியேறுமாறு இந்தியத் தூதரகம் சுட்டுரை பதிவில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.