உலகம்

இராக்கில் ஏவுகணைத் தாக்குதல்: ஈரான் பொறுப்பேற்பு

DIN

இராக்கில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்துக்கு அருகே நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பேற்றுள்ளது. சிரியாவில் இந்த வார தொடக்கத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் படை வீரா்கள் இருவா் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளது.

வடக்கு இராக்கின் இா்பில் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரக வளாகம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், இத்தாக்குதலுக்கு இராக்கும், அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்தன. இராக்குக்கான ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக இராக் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், ஈரான் ராணுவம் தனது இணையதளத்தில், இா்பில் நகரில் உள்ள இஸ்ரேல் உளவு மையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சிரியாவில் ஈரானின் புரட்சிகர படையைச் சோ்ந்த இருவா் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT