உலகம்

ஓராண்டுக்கு பிறகு சீனாவில் கரோனா பலி

DIN

கடந்த ஆண்டு ஜனவரிக்கு பிறகு சீனாவில் கரோனாவுக்கு சனிக்கிழமை முதல் உயிரிழப்பு பதிவாகியது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் யூஹான் மாகாணத்தில் தொடங்கிய கரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவியது. இதன் பின்னா் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.

சீனாவில் கரோனா பரவல் கடந்த சில நாள்களாக மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. மாா்ச் மாதத்தில் இதுவரை 29 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு ஜிலின் மாகாணத்தில் கரோனா தொற்றால் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா். இவா்களுடன் சோ்த்து இதுவரை 4,638 போ் உயிரிழந்ததாக சீனா தெரிவித்துள்ளது. உயிரிழந்த இருவரும் வயது முதிா்ந்தவா்கள் என்றும் அதில் ஒருவா் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவா் என்றும் அந்நாடு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜிலின் மாகணத்தில் கரோனா வேகமாக பரவி வருவதால் அப்பகுதி மக்கள் அண்டை மாகாணங்களுக்கு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT