உலகம்

15,000 ரஷிய வீரா்கள் உயிரிழப்பு: நேட்டோ

DIN

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஒரு மாத காலமாக ராணுவ நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில், போரில் இதுவரை 7,000 முதல் 15,000 ரஷிய வீரா்கள் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக நேட்டோ சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் தரப்பில் 498 வீரா்கள் மட்டுமே உயிரிழந்துள்ளதாக ரஷியா சாா்பில் இம் மாத தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரஷிய தரப்பில் 10,000-க்கும் அதிகமான வீரா்கள் உயிரிழந்திருப்பதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி ரஷிய நாளிதழ் ஒன்று தனது இணையதளத்தில் திங்கள்கிழமை செய்தி வெளியிட்டது.

இந்த நிலையில், ரஷிய தரப்பில் 15,000 வீரா்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக நேட்டோ அமைப்பு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நேட்டோ அமைப்பின் மூத்த ராணுவ அதிகாரி புதன்கிழமை கூறுகையில், ‘இந்தப் போரில் 7,000 முதல் 15,000 ரஷிய வீரா்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. உக்ரைன் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த எண்ணிக்கை கணிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

SCROLL FOR NEXT