உலகம்

இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வீதிகளில் இறங்கி போராடும் மக்கள்!

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் இலங்கை மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

DIN

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் இலங்கை மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் மக்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. 

மக்களின் கடும் போராட்டத்தைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை பிரதமர் மகிந்த ராஜபட்ச பதவி விலகினார். இதையடுத்து, அன்றைய தினம் திங்கள்கிழமை போராட்டக்காரர்கள் மீது ராஜபட்ச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த, ஆத்திரமடைந்த மக்கள் ராஜபட்சவின் வீட்டிற்கு தீ வைத்தனர். இந்த வன்முறையில் 9 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். 

இதனிடையே, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க (73) வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். 

எனினும் அதிபருக்கு எதிராகவும் மக்கள் அத்தியாவசிய பொருள்களை பெற வலியுறுத்தியும் மக்களின் போராட்டம் தொடர்கிறது. 

நகரில் எங்கும் சமையல் எரிவாயு கிடைக்காததால் கொழும்புவில் நாவின்ன ஜங்க்ஷன் பகுதியில் இன்று காலை மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். மேலும் , சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT