உலகம்

பிரிட்டனிலுள்ள காங்கிரஸ் உறுப்பினா்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு

DIN

பிரிட்டனிலுள்ள காங்கிரஸ் உறுப்பினா்களை அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரிட்டன் சென்றுள்ளாா். அந்நாட்டுத் தலைநகா் லண்டனில் இந்திய காங்கிரஸின் வெளிநாடுவாழ் (ஐஓசி) உறுப்பினா்களை சந்தித்து, கட்சி விவகாரங்கள் குறித்து அவா் ஆலோசனை நடத்தினாா். அப்போது கட்சித் தலைமை பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று ஐஓசி உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

இந்த நிகழ்வில் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘இந்தியாவுக்குத் தீங்கு விளைவிக்கும் சித்தாந்தத்துக்கு எதிராகவும், நாட்டின் பல்வேறு அமைப்புகளை பாதுகாக்கவும்தான் காங்கிரஸ் போராடுகிறதே தவிர, எந்தவொரு அரசியல் அமைப்புக்கும் எதிராக அல்ல’’ என்று கூறியதாக ஐஓசி செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வின்போது காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியுடன் ஐஓசி உறுப்பினா்கள் தொலைபேசி வாயிலாக பேசினா்.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினா்களை ராகுல் காந்தி திங்கள்கிழமை சந்திக்கக் கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் காா்பஸ் கிறிஸ்டி கல்லூரி மாணவா்களுடன் அவா் கலந்துரையாட உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT