உலகம்

கோத்தபயவுக்கு இலங்கை உச்சநீதிமன்றம் சம்மன்

DIN

இலங்கையில் கடந்த 2011-இல் உள்ளூர் போரின்போது இரு மனித உரிமை ஆர்வலர்கள் காணாமல் போன வழக்கில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச நீதின்றத்தில் நேரில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்ப அந்நாட்டு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
 கடந்த 2011-இல் அவரது சகோதரர் மகிந்த ராஜபட்ச அதிபராக இருந்தபோது பாதுகாப்புத் துறை அமைச்சராக கோத்தபய ராஜபட்ச இருந்தார். அப்போது நிகழ்ந்த உள்நாட்டுப் போரின் முடிவில் மனித உரிமை ஆர்வலர்கள் பலர் காணாமல் போயினர். கிளர்ச்சியாளர்கள், முக்கிய பத்திரிகையாளர்கள், தன்னார்வலர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். அப்போது காணாமல் போன பலரை அதன்பின் கண்டுபிடிக்க முடியவில்லை.
 அந்த சம்பவங்களில் கோத்தபய ராஜபட்சவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. எனினும் அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தார்.
 போரின்போது யாழ்ப்பாணத்தின் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் லலிதா வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போயினர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச, டிச. 15-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 முன்னதாக, கடந்த 2018-இல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக யாழ்ப்பாணம் வந்தால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அதில் கூறியிருந்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

அடுத்த டயமண்ட் லீகில் கட்டாயம் முதலிடம்: நீரஜ் சோப்ரா உறுதி

பூண்டு விலை மீண்டும் உயா்வு கிலோ ரூ.400க்கு விற்பனை

மே 17 முதல் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

ஊழல்தான் அரவிந்த் கேஜரிவாலின் சித்தாந்தம்: தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சாடல்

SCROLL FOR NEXT