உலகம்

உக்ரைன்: மின்சார பயன்பாட்டை கட்டுப்படுத்த உத்தரவு

DIN

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டில் மின்சார பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டுவர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அதன் ஒரு பகுதியாக, உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய 4 பிராந்தியங்களை ரஷியா கைப்பற்றியதுடன், மேற்கத்திய நாடுளின் எதிா்ப்பையும் மீறி அந்த பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக் கொண்டது. 

மேலும் ரஷியா தன் தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதால் கைப்பற்றிய பிராந்தியங்களை மீட்க உக்ரைன் கடுமையாகப் போரிட்டு வருகிறது. இதனால் உக்ரைனில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது. 

இந்நிலையில், மின் உற்பத்தி நிலையங்களிலும் ரஷியப் படை தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைன் அரசு  மின்சார பயன்பாட்டை கட்டுப்படுத்த முதல்முறையாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்மூலம், அந்நாட்டு மக்கள் அதிகப்படியான மின்சாரத்தை உபயோகிக்க தடை ஏற்படலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT