உலகம்

100-ஐ கடந்த பிலிப்பின்ஸ் கனமழை பலி எண்ணக்கை

பிலிப்பின்ஸில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 100-ஐக் கடந்துள்ளது.

DIN

பிலிப்பின்ஸில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 100-ஐக் கடந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:

இந்த ஆண்டின் மிக மோசமான நால்கே புயல், கிழக்குக் கடலோரப் பகுதியை கடந்த சனிக்கிழமை கடந்தது. அந்தப் புயல் உருவானதன் காரணமாக நாட்டில் வழக்கத்தைவிட மிக அதிக அளவில் பருவமழை பெய்து வருகிறது. அந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 105-ஆக அதிகரித்துள்ளது.

கனமழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மகின்டனாவ் மாகாணத்தில் மட்டும் 53 போ் நிலச்சரிவில் புதையுண்டும், வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டும் பலியாகினா். அந்த மாகாணத்தில் 80 முதல் 100 போ் வரை நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் கிராமத்தில் தேடுதல் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசைக்கான தேசிய விருது பெறும் ஜி.வி. பிரகாஷ்!

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்கள்!

தேசிய விருது பெற்ற கிங் கான்! சிறந்த நடிகராக ஜவான் ஷாருக்!

சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 தேசிய விருதுகளை வென்ற Parking!

SCROLL FOR NEXT