கோத்தபய மாலத்தீவில் இருக்கிறாரா? பதில் சொல்ல மறுக்கும் வெளியுறவுத் துறை
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தங்கள் நாட்டில்தான் தஞ்சமடைந்திருக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளிக்க மாலத்தீவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
மாலே: இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சியால், நாட்டை விட்டுத் தப்பியோடிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தங்கள் நாட்டில்தான் தஞ்சமடைந்திருக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளிக்க மாலத்தீவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
கொழும்பு சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில், கோத்தபய ராஜபட்ச, அவரது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் மாலத்தீவில் தரையிறங்கியதாகக் கூறப்படும் நிலையில், அதனை உறுதி செய்ய வெளியுறவுத் துறை மறுத்துவிட்டது.
இதையும் படிக்க.. 'நீ கொடுத்த புன்னகை..' கணவர் இறந்த சில நாள்களில் வந்த முக்கிய நாள்: கலங்கி நின்ற மீனா
Advertisement
Advertisement
கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே கடந்த வார இறுதியில் இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்த நிலையில், புதன்கிழமை, இலங்கை அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக கோத்தபய ராஜபட்ச அறிவித்திருந்த நிலையில், அதற்கு முன்னதாக, தனி விமானம் மூலம் இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு தப்பிடியதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இது குறித்து மாலத்தீவுகள் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, இது பற்றி இப்போது கருத்துக் கூறு முடியாது என்று தெரிவித்துவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.