உலகம்

இந்திய தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்பக்கூடாது: பாகிஸ்தான் எச்சரிக்கை

பாகிஸ்தானில் சிந்து மற்றும் பாஞ்சாப் மாகாணங்களில் இந்திய தொலைக்காட்சி சேனல்களை ஒளிப்பரப்பக் கூடாது என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

DIN


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சிந்து மற்றும் பாஞ்சாப் மாகாணங்களில் இந்திய தொலைக்காட்சி சேனல்களை ஒளிப்பரப்பக் கூடாது என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில்,  பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் தடை உத்தரவை மீறி இந்திய தொலைக்காட்சி சேனல்கள் ஒளிப்பரப்படுவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. 

அதனடிப்படையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், அரசின் உத்தரவை மீறியது தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து இந்திய தொலைக்காட்சி சேனல்களை ஒளிப்பரப்புவதை நிறுத்துமாறும் நாடு முழுவதும் உள்ள உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, அரசு உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

SCROLL FOR NEXT