கோப்புப்படம் 
உலகம்

பட்டாசு கடத்த முயன்ற இந்தியர் உள்பட 3 பேர் கைது!

நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக ஏராளமான பட்டாசுகளை கடத்த முயன்றதாக இந்தியர் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

DIN

காத்மாண்டு: நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக ஏராளமான பட்டாசுகளை கடத்த முயன்றதாக இந்தியர் உள்பட 3 பேரை காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வரும் திருவிழாக்களில் விற்பனை செய்யும் நோக்கில், இந்தியாவிலிருந்து பல்வேறு வகையான 1,223 கிலோ பட்டாசுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த குற்றவாளிகள் காத்மாண்டுவின் தஹாச்சலில் கைது செய்யப்பட்டனர்.

காத்மாண்டு தஹாச்சலில் 1,223 கிலோ பட்டாசுகளுடன் இந்தியர் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  இந்த சோதனையின் போது, தஹாச்சலில் உள்ள கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 65 வகையான பட்டாசு மூட்டைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

நேபாளத்தில் தற்போதுள்ள சட்டத்தின் கீழ் பட்டாசுகளை இறக்குமதி செய்வதும், கொண்டு செல்வது, விற்பது மற்றும் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவின் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: கிருஷ்ணசாமி

வெட்கம் பூக்கும் நேரம்.... ஜனனி அசோக்குமார்!

‘கூலி’க்காக சம்பளம் வாங்கினாரா? - ஆமிர் கான் விளக்கம் | Cinema Updates

மனசு உல்லாசமா பறக்குது! - 4th International Kite Festival in நம்ம சென்னை!

மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய பட போஸ்டர்!

SCROLL FOR NEXT