காயம்பட்டவர்களுக்கு உதவும் பணியில் பாலஸ்தீன மக்கள் | AP 
உலகம்

மீண்டும் துவங்கிய போர்: 175 பாலஸ்தீனர்களைக் கொன்ற இஸ்ரேல்!

தற்காலிக போர் நிறுத்தம் முடிவுற்று போர் மீண்டும் துவங்கிய சில மணி நேரங்களிலேயே 178 பேரை இஸ்ரேல் கொன்று குவித்துள்ளது. 

DIN

தற்காலிக போர் நிறுத்தம் முடிவுற்று இஸ்ரேல்-ஹமாஸ் போர் மீண்டும் துவங்கியுள்ள நிலையில், முதல் சில மணிநேரங்களிலேயே 178 பேரை இஸ்ரேல் கொன்றுகுவித்துள்ளதாகக் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 200 ஹமாஸ் இலக்குகளை இதுவரைத் தாக்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

காஸாவில் உள்ள போராளிகளும் இஸ்ரேலின் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நிறுத்தத்திற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கத்தார் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேல் தாக்குதலில் காயம்பட்ட பாலஸ்தீன குழந்தை | AP

இன்னும் 115 ஆண்களும், 20 பெண்களும், 2 குழந்தைகளும் ஹமாஸின் பிடியில் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 40 நாள்களுக்கு மேல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தத்தின் மூலம் காஸாவிற்கு மனிதநேய உதவிகள் அளிக்கப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வேறு எந்த உதவியும் காஸாவிற்குள் நுழையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

இஸ்ரேலின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட  சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஞாயிறு அன்று மீண்டும் சேவைகளைத் துவங்கிய சில மணி நேரங்களில் இஸ்ரேலின் மற்றுமொரு தாக்குதலுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து சிரியாவில் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவு

திருப்பத்தூரில் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்

அக்.14, 15-இல் மாணவா்களுக்கு பேச்சாற்றால், படைப்பாற்றல் போட்டிகள்

மாமனாரை தாக்கிய இளைஞா் மீது வழக்கு

மின்தடை தொடா்ந்தால் அதிமுக சாா்பில் போராட்டம்: எம்எல்ஏ அறிவிப்பு

SCROLL FOR NEXT