டிரெவர் நோவா | X (Twitter) 
உலகம்

2024 - கிராமி விருது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இவர்தான்!

இசைத்துறையில் உயரிய விருதுகளில் ஒன்றான கிராமி விருது நிகழ்ச்சி 2024-ல் நடைபெறவுள்ளது.

DIN

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள 2024 ஆம்  ஆண்டுக்கான கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்வை, மேடை நகைச்சுவையாளரான டிரெவர் நோவா தொகுத்து வழங்கவுள்ளார்.

இதனைத் தனது பாட்காஸ்ட்டில் பகிர்ந்துள்ள டிரெவர், நான்காவது முறையாக இந்த நிகழ்வில் தொகுப்பாளராகப் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டுக்கான விருதுகள் பரிந்துரையில் 9 பிரிவுகளில் இடம்பெற்றுள்ளார் இசைக் கலைஞர் எஸ்சிஏ. ‘கில் பில்’ என்கிற அதிரடியான இசைத் தொகுப்பு, இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக சிறந்த இசைத் தொகுப்பு, பாடல் மற்றும் பாடல்பதிவு உள்ளிட்ட பிரிவுகளில் பரிந்துரையாகியுள்ளது.

ஃபோப் பிரிட்ஜர்ஸ், டெய்லர் ஸ்விஃப்ட், ஒலிவியா ரோட்ரிகோ, பில்லி ஐலீஷ் என பல இசைக்கலைஞர்கள் 6 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

2024, பிப்.4 அன்று கிராமி விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தகவல்

மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்

SCROLL FOR NEXT