உலகம்

எக்ஸ் தளம் சீரானது!

DIN

எக்ஸ்(ட்விட்டர்) வலைதளத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியது.

உலகம் முழுவதும் கோடிக்கான மக்கள் ட்விட்டர் வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தை வாங்கிய எலான் மாஸ்க், எக்ஸ் எனப் பெயரை மாற்றினார்.

இந்த நிலையில், எக்ஸ் தளமானது இன்று காலை 11 மணியளவில் திடீரென்று அனைத்து பயனர்களுக்கும் முடங்கியது. முகப்புப் படத்தை தவிர பதிவுகள் உள்ளிட்ட வேறு எதுவும் காட்டவில்லை.

இருப்பினும், பயனர்களால் எக்ஸ் தளத்திலும் பதிவிட முடிந்தது. அதேபோல், எக்ஸ் தளத்தில் உள்ள ஸ்பேஸ் செயல்பட்டது.

இந்த கோளாறை எக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சுமார் ஒரு மணிநேரம் சரிசெய்து பகல் 12.15 மணியளவில் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

ஆனால், எக்ஸ் தளம் முடங்கியதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகாசி அருகே மீண்டும் வெடிவிபத்து!

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

SCROLL FOR NEXT