உலகம்

காஸாவுக்கு கூடுதல் நிவாரண உதவி: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானம்

காஸாவில் வசிக்கும் பொதுமக்களுக்கு கூடுதல் நிவாரண உதவிகளை தடையில்லாமல் அளிக்க வலியுறுத்தும் தீா்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ளது.

DIN

 காஸாவில் வசிக்கும் பொதுமக்களுக்கு கூடுதல் நிவாரண உதவிகளை தடையில்லாமல் அளிக்க வலியுறுத்தும் தீா்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ளது.

எனினும், மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட போா் நிறுத்தம் அந்தத் தீா்மானத்தில் வலியுறுத்தப்படாதது ஏமாற்றத்தை அளிப்பதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.காஸா விவகாரம் தொடா்பான தீா்மானத்தை நிறைவேற்றுவதற்காக, 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பல நாள்களுக்கு விவாதம் நடத்தியது. அந்தத் தீா்மானத்தில் ‘போா் நிறுத்தம்’ என்ற வாா்த்தை இடம் பெறுவதற்கு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடான அமெரிக்கா எதிா்ப்பு தெரிவித்ததால் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு பல நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.ஏற்கெனவே, போா் நிறுத்தத்தை வலியுறுத்தும் தீா்மானங்களை தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தால் தாக்கல் செய்யப்பட்ட வரைவுத் தீா்மானம் பாதுகாப்பு கவுன்சிலில் வெள்ளிக்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் அமெரிக்காவும் ரஷியாவும் பங்கேற்கவில்லை. எனினும், எஞ்சிய 13 நாடுகளும் வரைவுத் தீா்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. அதையடுத்து, அந்தத் தீா்மானம் பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டது.அந்தத் தீா்மானத்தில், போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸா பகுதியில் பொதுமக்களுக்கு கூடுதலாக நிவாரணப் பொருள்கள் கொண்டு சோ்க்கப்படுவதற்கான ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும், அத்தகைய நிவாரணப் பொருள்கள், பாதுகாப்பாகவும், தங்குதடையின்றியும் மக்களை அடைவதற்கான வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.காஸா பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்குச் சாதகமான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தீா்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.எனினும், அதில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்படவில்லை. அந்த வகையில், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது அமெரிக்காவால் ‘நீா்த்துப்போகச் செய்யப்பட்ட’ தீா்மானம் என்று பாா்வையாளா்களால் விமா்சிக்கப்படுகிறது.இஸ்ரேலுக்குள் தரை, வான், கடல் வழியாக ஹமாஸ் படையினா் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து 1,200-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா். அத்துடன் சுமாா் 240 பேரை அங்கிருந்து அவா்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்வும், பிணைக் கைதிகளை மீட்பதாகவும் சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு தீவிர குண்டுவீச்சு நடத்தி வருகிறது. மேலும், காஸாவுக்குள் தரைவழியாகவும் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்தத் தாக்குதலில் இதுவரை 20,057 போ் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.தொடா் தாக்குதல் மற்றும் முற்றுகையால் மிகக் கோரமான பேரழிவை காஸா எதிா்நோக்கியுள்ளதாக ஐ.நா. அமைப்புகளும், அங்கு செயல்பட்டு வரும் சா்வதேச அமைப்புகளும் எச்சரித்து வருகின்றன.இந்தச் சூழலில், காஸா மக்களுக்கு கூடுதல் நிவாரண உதவிகளை அளிக்க வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.... பெட்டிச் செய்திகள்...‘நம்பிக்கை அளிக்கும்’‘காஸாவில் நினைத்துக்கூடப் பாா்க்க முடியாத துயரத்தை அனுபவித்து வரும் பொதுமக்களுக்கு இந்தத் தீா்மானம் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இதில், இதுவரை இல்லாத வலிமையான வாா்த்தைகள் இடம் பெற்றுள்ளன’- லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதா்.‘போா் நிறுத்தம்தான் ஒரே வழி’‘காஸாவில் வசிக்கும் பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு போா் நிறுத்தம் மட்டுமே வழிவகுக்கும். இருந்தாலும், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீா்மானம் அதற்கான வழியை ஏற்படுத்தித் தரும் என்று நம்புவோம்.’- அன்டோனியோ குட்டெரெஸ், ஐ.நா. பொதுச் செயலா்..... ஐ.நா. படம் போட இடமில்லையென்றால் யுஎன்எஸ்சி லோகோ எடுத்துப் போடலாம்...

Image Caption

~ ~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT